தெரியாத அறிவியல் உண்மைகள்

உடம்பில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் நமக்கு தண்ணீரின் ஞாபகமே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தாலே போதும். முதலில் தொண்டையில் ஈரம் காய்ந்துப் போக மூளை விழித்துக் கொண்டு தண்ணீர் தேவையை வாய்ப் பகுதிகளில் உள்ள நரம்புகளுக்கு உணர்த்துகிறது

புயல் எப்படி உருவாகிறது...



Cyclone
புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது.


தீவிரவாதிகளால் ஆபத்து என்று கருதப்படுகிற உலகத் தலைவர்களுக்காக குண்டு துளைக்க முடியாத கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை எப்படி அந்தத் தலைவர்களைப் பாதுகாக்கின்றன என்பது தெரியுமா? இந்தக் கார்களின் கண்ணாடிகள் ‘கெவ்லார்’ எனப்படும் ரசாயனப் பொருள் கலந்து கனமாக தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கண்ணாடியின் மேல் குண்டு படும்போது அதன் வேகம் குறைந்து வழுக்கிக் கொண்டு போய் ஏதாவது ஒரு பக்கம் விழுந்துவிடும். இந்தக் கண்ணாடியைத் தவிர காரில் பயணிகள் உட்காரும் இடத்தைச் சுற்றிலும் 10 மில்லிமீட்டர் கனத்துக்கு இரும்புத் தகடுகளும் வைக்கப்படும். இந்த இரும்புத் தகடுகளும் துப்பாக்கித் தோட்டாக்களை உள்ளே அனுப்பாது.
அதே போல் யாராவது காரைப் பின் தொடர்ந்து வந்தால் காரை மறைக்கும் வித்த்தில் வெண்மையான புகை மண்டலத்தை எழுப்பி எதிரிகளை குழப்பிவிடும் வசதியும் இதில் உள்ளது.



மழை பெய்யும்போது பெரும் சப்தத்துடன் இடி இடித்தால் நம்மில் பாதிபேர் ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறோம். அடிக்கடி இடிதாக்கி இரண்டு பேர் பலி என்ற செய்தியையும் பார்க்கிறோம். இந்த இடி எப்படி உருவாகிறது, இது யாரையெல்லாம் தாக்கும்?


மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும். அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே செல்வதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியை குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்ளும். இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன.



இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. ஒளியை மின்னலென்றும், ஒலியை இடியென்றும் சொல்கிறோம். மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது 10 மில்லியன் கிலோவாட்ஸ் அளவுக்கு மின்சக்தி உருவாகும். இது நேரடியாக மனிதர்களைத் தாக்குகிறது.



உயரமான கட்டிடங்கள், உயரமான மரங்கள் போன்றவை இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. உயரமான மரங்களுக்கு கீழே ஒதுங்கி நிற்பவர்களை இடிதாக்குகின்றது. கூட்டமாக நடந்து செல்லும்போது உயரமாக இருப்பவர்களை இடிதாக்கும் வாய்ப்பு அதிகம். திறந்த வெளியில் இருப்பவர்களையும் இடிதாக்கும் வாய்ப்பு அதிகம்.



மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. செருப்பு அணிந்த நடக்கும்போது இடிதாக்கும் வாய்ப்பு குறைவு. மழை நேரங்களில் குடைபிடிக்கும்போது அதன் பிளாஸ்டிக் கைப்பிடியை பிடிப்பதன் மூலம் இடிதாக்குவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்


இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

4 comments:

Anonymous said...

NANREE
MIHAVUM UPAYOOHAMAAHA IRUNTHATHU

MIHA MIHA NANREEKAL

Anonymous said...

மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

Unknown said...

எனக்கு ஒரு சந்தேகம் கடிகாரத்தில் 12 மணி நேரம் கொடுக்கப்பட்டது ஏன்?

Unknown said...

Bumi suiriyanai sutra 24 hrs ..so pagal 12 Mani neram iravu 12 Mani neram ...athan adipadiyal pirithu ulargal...railway time athanal than 24 hrs ....

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.