கணினிக்கு நமது face தான் நமக்கு password

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் செல்ல வேண்டியதாக இருக்கும் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்
நுழையலாம். 

எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு. கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது Hollywood படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.
இதற்காக பலமென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது. மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் Install செய்துகொள்ள வேண்டியது தான். Webcam அல்லது மடிக்கணினியுடன் வரும் Camera முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம்.
Windows Vista மற்றும் Windows7 Operating Systemல் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் Version கிடைக்கிறது. மென்பொருளின் அளவு 8.3 MB தான். கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக, மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
Download
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

2 comments:

dsfs said...

Dont use co.cc account. google stops co.cc blogs in search index. i m losing my traffic with this using of co.cc account

Kavinilavu said...

thanks ponmalar

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.