ISO image fileகளை உருவாக்க மற்றும் convert செய்ய

விண்டோஸ் image file formatல் குறிப்பிடதக்கது ISO file format ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை iso file format ல் மட்டுமே இருக்கும். இவ்வாறு உள்ள ஐஎஸ் fileகளை பூட்டபிள் பைலாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒருburning tool கொண்டு மட்டுமே மாற்ற முடியும். இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண பைல்களை iso பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு, ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட பைலை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும்.

குறிப்பிட்ட சில மணி நேரங்களில் பைலானது convert செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள்  cd, dvdமற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும்.  இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். iso file களை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

0 comments:

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.