உங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா?எப்படி கண்டுப்பிடிப்பது

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.

இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் )ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.மேலும் உங்களுக்கு இலவச VIRUS SOFTWARE  வேணும்னா கீழ உள்ளதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
FREE AVG ANTI VIRUS 9.0 DOWNLOAD

download button
Read More

FILEகளைஐ அழிக்க முடியவில்லையா

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.

எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!
Read More

SOFTWAREஐ டெலிட் செய்ய மூன்று வழிகள்

சில சாப்ட்வேர்களை நாம் கணிணியில் இன்ஸ்டால்
செய்வோம். பிறகு அது தேவையில்லையென்று
அதை அன்இன்ஸ்டால் செய்துவிடுவோம். அவ்வாறு
அன்இன்ஸ்டால் செய்யும்போது முறையாக அதை
அன்இன்ஸ்டால் செய்யவேண்டும். அவ்வாறு
அன்இன்ஸ்டால் செய்ய முத்தான மூன்று வழிகளை
இப்போது பார்க்கலாம்.

முதல் வழிமுறை:-
தேவையில்லாத சாப்ட்வேரை முடிவு
செய்துகொள்ளுங்கள். அடுத்து Start கிளிக் செய்து
வரும் - Programs -ல் நமது சாப்ட்வேரை தேர்ந்தேடுங்கள்.
அந்த ப்ரோகிராமுடன்Uninstall என்கின்ற யுட்டிலிட்டி
கொடுத்திருப்பார்கள்.அதை பயன்படுத்தி சாப்ட்வேரை
நீக்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இரண்டாவது வழிமுறை:-

Start கிளிக் செய்யுங்கள்.Settings கிளிக் செய்யு்ங்கள்.
வரும் மெனுவில் Control Pannel கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில் Add/Remove Programs கிளிக்
செய்து வரும் விண்டோவில் வேண்டாத சாப்ட்வேரை
தேர்வு செய்து Uninstall கிளிக் செய்யவும். கீழே
உள்ள படத்தை பாருங்கள்.

மூன்றாவது வழிமுறை:-

இதை கவனத்துடன் செய்யவேண்டும். இது மெயின்
பாக்ஸில் பீஸ்போடுவது போன்றது.சரியாக செய்ய
வில்லையென்றால் ஒன்றும் ப்ரச்சினை யில்லை.
பார்த்துக்கலாம். என்ன .மீண்டும் சர்வீஸ் இன்ஜினியரை
கூப்பிட வேண்டும். அவ்வளவு தான்.சரி இனி
ரெஜிஸ்டரில் இருந்து சாப்ட்வேரை நீக்குவது பற்றி
இப்போது பார்க்கலாம்.

முதலில் Start கிளிக் செய்து Runஓப்பன் செய்து
REGEDIT.EXE-ஐ தட்டச்சு செய்யவும். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.
வரும் விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE
கிளிக் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Software கிளிக் செய்யவும்.

பின் வரும் விண்டோவில் Microsoft கிளிக் செய்யுங்கள்.
அதில் உள்ள கூட்டல் குறியை நீங்கள் கிளிக்
செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் முறையே Curent Version
மற்றும் Uninstal தேர்ந்தேடுங்கள். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.
இதில் Uninstal கிளிக் செய்ய உங்கள் கணிணியில் உள்ள
சாப்ட்வேர் லிஸ்ட் அனைத்தும் வரும்.
இதில் தேவையான சாப்ட்வேரை தேர்வு செய்து அதை Delete செய்யுங்கள்.
இறுதியில் முறையே வெளியெறுங்கள். .
Read More

WiFi தொழில்நுட்பம் பற்றி அறிவோம்



பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம்.

இந்த Wireless Network – WiFi அல்லது 802.11 Network என அழைக்கப்படுகிறது. மேற்க்கண்ட படம் ஒரு WiFi Network – ஐ விளக்குகிறது,
Wireless Network-ஆனது, TV, Radio மற்றும் Cell Phones போல Radio Waves எனப்படும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இதை தொழில்நுட்ப சொல்லில் Two Way Radio Communication என அழைக்கலாம். இதன் தகவல் எல்லை 100 Meters வரை இருக்கும்.

ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Wireless Network Adapter அருகில் உள்ள Wireless Access Point- உடன் எப்பொதும் தொடர்பில் இருக்கும், அது Computer Signal-களை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக Wireless Access Point அல்லதுRouter-க்கு அனுப்பி வைக்கிறது, பின்னர் Router ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) பின் internet-உடன் தொடர்பு கொள்கிறது. அதேபோல், Internet- இல் இருந்து தகவல்களை பெற்றபின் அதை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக கம்ப்யூட்டரின் Wireless Network Adapter-க்கு அனுப்பிவைக்கிறது. Wireless Network Adapter ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) திரையில் நமக்கு காண்பிக்கப்படுகிறது.
இந்த Radio Signal, மற்ற Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz – 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;
802.11a - இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது. இது orthogonal frequency-division multiplexing
(OFDM) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.
802.11b – இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இது complementary code keying
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
802.11g – இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இதுவும் orthogonal frequency-division
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
802.11n – இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g – ஐ விட மூன்று மடங்கு அதிகம், தோராயமாக 140 Mbps. இது Multiple Input, Multiple Output (MIMO) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network – க்கு ஒரு பெயர் உண்டு, அதை – SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router – இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel – ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும்.
மற்றும், நம்முடைய Wireless Router – களை Secure Mode – லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.
WiFi Protected Access – WPA, Wired Equivalency Privacy – WEP போன்றவை Wireless Security -ன் சில வகைகள் ஆகும்.

Read More

INTERNET EXPLORERஐ வேகமாக இயங்க வைப்பது எப்படி?

உலகில் 66% இணையப் பயனாளார்கள் Internet Explorer எனும் உலவி(Browser) யைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டு Internet Explorer தங்களின் தாத்தாவை விட மிகவும் மெதுவாகச் செயல்படுகிறது.
Hacker எனப்படும் புள்ளுறுவிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மென்பொருள்களில் Internet Explorerம் ஒன்று.
உங்களின் அனைத்து add-on எனப்படும் துணைக் கருவிகளை முழுமையாக நீக்குவதன் மூலம் தங்களின் இணைய உளவியை 40%ற்கும் மேல் விரைவாகச் செயல்பட வைக்கலாம்.
ஏன் என்றால், அனைத்து  add-on  மென்பொருள்களும் உங்களுக்கு தெரியாமலேயே இணைய இணைப்பை பயன்படுத்திக்கொள்ளும். இதனால், உங்களுக்கு அனைத்து வளைபக்கங்களும் மெதுவாகப் பதிவிறக்கம் ஆவது போல் தோன்றும்.
Tools -> Manage Addons -> Toolbars
அங்கு சென்று Adobe Flash, Java & AVG/BitDefender or any Anti-Virus toolbars தவிர மற்ற அனைத்து தேவை இல்லாத கருவிப்பெட்டிகளை (Toolbars) செயல்நிலை நிறுத்தம் செய்யவும். (Disable).
1. Yahoo
2. Ask
3. MSN Toolbar
4. Google Toolbar
5. Any toolbar you never used after installation.
ஆகியவை, உங்களின் இணைய இணைப்பை சாப்பிடும் கருவிப்பெட்டிகள் ஆகும்.
Read More

சிறந்த LCD/TFT MONITOR வாங்குவது எப்படி?

LCD / TFT  திரை வாங்கும் போது சில விசயங்களை மனதில் கொள்ளவேண்டும்.
1. அளவு
தங்களின் தேவை மற்றும் சந்தை விலையைப் பொறுத்து அளவு மாறுபடும்.
15 – இன்ச்
16 – இன்ச் (சில மாடல்களில் மட்டும்)
17 – இன்ச்
20 – இன்ச்
22 – இன்ச்
ஆகியவை சராசரியான அளவுகள்.
2. விலை:
அளவு கூடக் கூட விலை 2000 முதல் 4000 வரை கூடும்.
22இன்ச் திரை சராசரியாக 10000 ரூபாய் முதல் 11000 ரூபாய் வரை கிடைக்கும்.
ரூபாய் 6500 – 7000ல் ஒரு நல்ல 17 இன்ச் திரையை வாங்கிவிடலாம்.
3. எந்தத் தயாரிப்பு நல்லது?
SAMSUNG :
திரை தயாரிப்பில் மிகவும் அனுபவம் மற்றும் மக்களின் நம்பிக்கை பெரிதும் உள்ள இந்த நிறுவனத்தின் திரைகள் சிறப்பாக உள்ளன.
DELL:
அருமையான தரத்தின் அடையாளமாக விளங்கும் இந்த நிறுவனம், மிகச் சிறந்த திரைகளை வெளியிடுகிறது. மக்களின் மிக இன்றியமையாத் தேவையான விற்பனைக்குப் பிந்திய சேவை வழங்குவதில் இந்நிறுவனம் சற்றே பின்தங்கி உள்ளது.
LG, Viewsonic & Acer போன்ற நிறுவனங்கள் நல்ல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி இருந்தாலும், விற்ப்பனை செய்வொரின் ஆதரவு குறைவாகவே உள்ளது.
டெக்தமிழ் பரிந்துரை:
சம்ஸூங் 20 அல்லது 22 இன்ச் திரை வாங்குவது மிகவும் நல்லது.
அல்லது 17இன்ச் டெல், LG வாங்கலாம்.
Read More

புதியதாக வந்துள்ள Firefox - 4 DOWNLOAD செய்ய

Mozilla வின் புதிய பதிப்பு Firefox 4 (Beta Version). தற்சமயம் Windows க்கு மட்டும்! விரைவில் Mac & Linux இயங்குதளங்களுக்கும்! நிறைய Features! மற்ற Firefox பதிப்புகளைவிட Firefox 4 நீண்ட காலம் நிலைக்கும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்! 



சிறப்புகள்:

Interface: தோற்றம் சார்ந்த விஷயங்கள். எவ்வளவு விவரித்தாலும் சரியாகப் புரியாது. பயன்படுத்திப் புரிந்து கொள்ளவும். 

Add - On Manager: நமக்குத் தேவையான Add-On களைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதி. 

WebM & HD Video : வீடியோக்களைத் துல்லியமாகப் பார்க்க உதவும் தொழில்நுட்பம். 

Protecting your Privacy: கணினிக் களவாணிகள் (Hackers!) ஊடுருவி நமது Browsing History மற்றும் உலவி சார்ந்த தகவல்களை அளளமுடியாத வடிவமைப்பு! 

நான் தொழில்நுட்பத்தில் சிறந்தவனில்லை. எனவே, எனக்குத் தெரிந்ததை சொல்லியிருக்கிறேன். தொழில்நுட்பப் பதிவுகள் எழுதும் நண்பர்களிடம் கேட்டுக் கொள்ளவும். Firefox 4 லிலிருந்துதான் இந்த இடுகையை எழுதுகிறேன். எனக்கு Firefox 4 பிடித்திருக்கிறது.



Read More

VIRUS இருக்கா? இல்லையா? எப்படி கண்டறிவது

உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.
இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள். உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும். 
இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்
.

http://www.virustotal.com/
Read More