நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் நம்முடைய கணினிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.
இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகபடுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்த படுகிறது. இப்பொழுது இந்த ஆண்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
- அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது.
- கணினியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.
- இணையத்தில் சில மால்வேர் பாதிக்க பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.
- ஹார்டிஸ்கில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுத்து கொள்வதால் கணினியின் வேகம் குறைவதில்லை.
- வேகமாக பைல்களை ஸ்கேன் செய்ய கூடியது.
- பைல் உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.
- ஸ்க்ரீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.
- கணினி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.
- E-mail Scanner. மேலும் பல வசதிகள் இதில் அடங்கியுள்ளது ஆகவே இந்த மென்பொருளை கணினியில் நிறுவி உங்கள் கணினியை பாதுகாத்து கொள்ளுங்கள்.
1599
இன்ஸ்டால் செய்யும் முறை:
- நீங்கள் இந்த ஆன்ட்டி வைரசை ஏற்க்கனவே உபயோகித்து கொண்டு இருந்தால் நீங்கள் சுலமாக இந்த அப்டேட் வெர்சனை நிறுவி கொள்ளலாம்.
- முதலில் கீழே டாஸ்க்பாரில் உள்ள அவஸ்ட் லோகோ மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Update என்பதை க்ளிக் செய்து பிறகு Program என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கணினியில் புதிய பதிப்பு இன்ஸ்டால் ஆகிவிடும்.
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!
2 comments:
really nice info bro
உங்கள் தகவல்கள் எனக்கு மிகவும் பயடுள்ளதாக அமைந்தது மிக்க நன்றி
Page Maker குறித்து பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும்
மிக்க நன்றி
http://valibar.blogspot.in/
http://valibar1.blogspot.in/
Post a Comment
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.