அனுப்பிய emailஐ தடுப்பது எப்படி

gmailல் Email பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து send button ஐ  அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும். மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவிகரமாக அமையும் . seng buttonஐ அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ (Undo) buttonஐ அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில் 5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் செய்ய தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது.
30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது. 30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30 நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்.
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

1 comments:

Hari said...

Friend... Good Post. But i like to say one more good news.We can set upto 30 Seconds. To set this, Settings-> General (tab). Select 30 seconds under 'undo send'.

Regards
Hari (http://hari11888.blogspot.com)

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.