pendriveக்கு password எப்படி உருவாக்குவது


நம்மிடத்தில்  உள்ள சில முக்கியமான dataகளையும்
மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்
பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும்.
இவற்றில் அனைவரும் அதிகம் பயன்படுதுவது Pen Drive ஆகும்.
நம்முடைய PenDrive தகவல்களை மற்றவர்கள்  பார்க்காதவாறு செய்யலாம்.
நம்மிடம் உள்ள Pendrive க்கு password கொடுத்து இதை தடுக்க முடியும்.

அதற்க்கு நீங்கள் Ross Mini என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து
பதிவிறக்கி install செய்ய வேண்டும்.

மென்பொருளை பதிவிறக்க செய்ய : Rohos Mini

இன்ஸ்டால் செய்த பின் Rohos Mini மென்பொருளை Open செய்யவும்.
படம் 1 யை பார்க்கவும்.
படம்-1


அதில் Setup USB key என்பதனை click செய்யவும்.
Pendrive கணினியுடன் இணைக்கபட்டிருந்தால் Pendrive
அளவு தெரியும்.படம் 2 யை பார்க்கவும்.

படம்-2


அதில் Change என்பதை கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில்
Disksiz மற்றும்File system போன்றவற்றை தேர்வு செய்யவும்.
பட்ம் 3 யை பார்க்கவும்.

படம்-3

பிறகு ok  செய்யவும். Password கொடுத்து Createdisk என்பதை
click செய்யவும்.படம் 4 யை பார்க்கவும்.

படம்-4

Performing operation என்ற செய்தி screenல் தோன்றும்.
படம் 5 யை பார்க்கவும்.

படம்-5

பின் இரண்டு நிமிடத்தில் Rohos Successfuly created என்ற செய்தி
திரையில் தோன்றும்.படம் 6 யை பார்க்கவும்.

படம்-6
பின் Rohos Icon யை click செய்து, வரும் windowல்
Conect disk என்பதனை click செய்யவும்.படம் 7 யை பார்க்கவும்.

படம்-7
Connectdisk என்பதை கிளிக் செய்தவுடன் வ்ரும் விண்டோவில்
Password யை கொடுத்து. Pendrive யை Open செய்ய முடியும்.
படம் 8 யை பார்க்கவும்.

படம்-8

Pendrive யை விட்டு வெளியே வரும் போது.
Rohos Icon யை கிளிக் செய்து வரும் விண்டோவில்
Tools என்பதனைகிளிக் செய்யவும்.படம் 9 யை பார்க்கவும்.


படம்-9

அதில் Disconnect என்பதை கிளிக் செய்து விட்டு வெளியேறவும்.
படம் 10 யை பார்க்கவும்.

படம்-10

இனி Pendrive க்கும் Password கொடுத்து பயன்படுத்த முடியும்.
Read More

கணினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி

USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம்  போன்ற இடங்களில் USB னை  பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.

இதனை WINDOWS இல் DISABLE செய்வது பற்றி பார்ப்போம் 
REGISTRY EDITOR செல்லவேண்டும்  அதற்க்கு ,

RUN----->TYPE  " regedit "

REGISTRY EDITOR சென்றவுடன்,

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor 
மேலே உள்ள PATH க்கு சென்று பின்,
START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து  ஒரு விண்டோ ஒன்று  திறக்கும்,
அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்றவேண்டும். (படம் 2). 
 பின் OK கொடுத்து கணினியை RESTART  செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை ("3") நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .

REGEDIT WINDOW

படம் -2
Read More

TASK MANAGER HAS BEEB DISABLED க்கு ஒரு தீர்வு


உங்கள் கணினியில் TASK MANAGER திரக்க முடிய வில்லையா? கவலை வேண்டாம்


START பட்டனை அழுத்தி RUN COMMAND தெர்வு செய்யவும்,


அதில் gpedit.msc என்று தட்டச்சு செய்து உள்ளீடு செய்யவும்


இப்போது வரும் பெட்டியில் Administrative Templates தேர்வு செய்யவும், அதன் பிறகு அதர்க்கு உள்ளடுக்கில் system எனும் அடுக்கை தேர்வு செய்யவும், 


அதர்க்குள் இருக்கும் Ctrl+Alt+Delete options தேர்வு செய்யவும், அதன் பிறகு Remove Task Manager option யை இரட்டை கிளிக் செய்யவும் 


இந்த option யை DISABLE செய்யவும். 


அதோடு வெளிவரவேண்டியதான்.


இதை செய்ய சுலபமில்லை என நினைப்பவர்கள் கீலே உள்ள downloadயை அலுத்தவும்

Read More

கணினியில் உருவாகும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு


நமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இதனால் கணினி நம்மை பாடாய்படுத்தும். இவ்வாறு வைரஸ் இனால் பாதிக்கப்பட்ட கணணியில் Task manager, registry editor போன்றவற்றை Open பண்ணும் போது Error Message மட்டுமே வரும் உதாரணமாக Task manager ஐ Open பண்ணினால் "Task Manager has been disabled by your administrator" என்ற Error Message வரும்.

இதுபோல நச்சு நிரலால் ஏற்படும் 25 முதன்மையான பிரச்சனைகளுக்கு தீர்வாக XP Quick Fix என்ற மென்பொருள் பயன்படுகிறது, இதை நிருவவேண்டிய அவசியமில்லை RUN செய்தாலே போதும். இந்த மென்பொருள் 562kb அளவுள்ளது

இந்த மென்பொருளால் நாம் கணினியில் அடையும் பயன்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
  • Enable Task Manager
  • Enable Registry Editor
  • Stop My Documents open at startup
  • Enable Folder Options
  • Restore missing Run dialog box
  • Enable Command Prompt
  • Restore My Computer (Computer) properties
  • Restore Device Manager
  • Fix delay in opening Explorer
  • Restore grayed Explorer and Taskbar toolbars
  • Restore My Documents properties
  • Remove OEM splash and wallpaper
  • Restore My Network Places to Desktop
  • Enable Recovery Console
  • Restore grayed file associations
  • Fix right-click error
  • Fix slow network file/shared/remote
  • Restore Network icon to system tray
  • Fix slow hotkeys
  • Fix CD/DVD drive is missing or not recognized
  • Fix CD autoplay
  • Restore "Send To" context menu item
  • Restore the native ZIP file integration
  • Fix error 1606 couldn’t access network location
  • Error when trying to access Add or Remove/ Program and Features program
மேலுள்ள பிரச்சனைகளில் எதாவது ஒன்று உங்களுடைய கணணிக்கு இருப்பின் அதற்குரிய button ஐக் Click செய்வதன் மூலம் அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும்.
Read More

உங்கள் கணினி Registry Clean செய்ய Wise Registry Cleaner மென்பொருள்


 நாம் கணினியில் சில மென்பொருட்களை இன்ஸ்டால் செய்திருப்போம். நாளடைவில் அது வேண்டாமென்று Uninstall செய்து விடுவோம். ஆனால் அப்படி செய்யும் போது சில தேவையில்லாத பைல்கள் நம் Registry லேயே தங்கிவிடும்.  இதனால் தான் நம் கணினி மிகவும் மந்தமாக  வேலை செய்யும்.
இந்த பைல்களை அழித்தாலே நம் கணினியின் வேகத்தை கண்டிப்பாக  கூட்ட முடியும் என்பதில் ஐயமில்லை. இதுவரை இந்த வேலைக்கு நான் வேறொரு நிறுவனத்தின் மென்பொருள் உபயோகித்து வந்தேன் ஆனால் இந்த மென்பொருள் அதைவிட நன்றாக உள்ளது. ஆதலால் இந்த Sofware அனைவருக்கும் உபயோக படும் என்று பதிவிடுகிறேன். 

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள டவுன்லோட் BUTTON ஐ  அழுத்தவும்.
DOWNLOAD செய்தவுடன் உங்களுக்கு வரும் WDCfree என்ற setup பைலை RUN செய்து  இன்ஸ்டால் செய்து கொள்ளவும். உங்களுக்கு இரண்டு shortcut keys வந்திருக்கும். அதில் Clear with 1 click  என்பதை டபுள் கிளிக் செய்தாலே உங்கள் கணினியின் registry SCAN ஆகி அதில் உள்ள தேவையில்லாத பைல்கள் ஸ்கேன் ஆகி தானாகவே பைல்களை delete செய்து விண்டோவும் CLOSE ஆகிவிடும். 
   

இந்த வேலைகளை Manual ஆக செய்ய வேண்டுமானால் Wise Registry Cleaner என்ற Shortcut KEYயை DOUBLE CLICK செய்து இயக்கி இடது பக்க மூலையில் மேலே உள்ள Scan என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய கணினி SCAN ஆகி 

வந்ததும் நான்காவதாக உள்ள Fix என்ற  பட்டனை அழுத்தி உங்கள் கணினியை CLEAN செய்து கொள்ளுங்கள்.

 முன்னர் உங்கள் கணினி இயங்கியதற்கும் இப்பொழுது இயங்குவதற்கும் நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக தெரியும்.நன்றி வணக்கம் .
Read More

HACK செய்யப்பட்ட GOOGLE ACCOUNT ஐ மீட்பது எப்படி


FIRST  நீங்க உங்க COMPUTER ல VIRUS இருக்கான்னு SCAN பண்ணுங்க. நல்ல ANTI VIRUS மட்டும் பத்தாது அத அடிக்கடி UPDATE பண்ணனும். பெரும்பாலும் உங்கள்  ACCOUNT  இதனால் தான் (HACK)ஹாக் செய்யப்படும். அப்படி HACK பண்ணிட்ட வர பிரச்சினைகளை எப்படி சமாளித்து நமது ACCOUNT ஐ திரும்ப பெறுவது?.


முதலாவதா GOOGLE CHROME PAGEல்  இருந்து உங்கள் ACCOUNTக்கு sign in ஆகுங்க இப்போ ACCOUNT SETTINGல நீங்க இருக்கணும்.


இதுல "Personal Settings " ல "Change password recovery options" இந்த பக்கத்துக்கு போங்க. இப்போ recovery email address ல உள்ள email id இப்போ நீங்க உபயோகிக்கிற உங்களோட இரண்டாவது அக்கௌன்ட் ஐ அதில் கொடுத்துடுங்க.


எப்போதும் பயன்படுத்துகிற உங்கள் மொபைல் நம்பர் மூலமாகவும் நீங்கள் உங்கள் recovery option ஐ செட் செய்ய முடியும். ஆனா முக்கியமான ஒன்று அந்த எண்ணை நீங்கள் எப்போதும் மாத்தவே கூடாது.


அடுத்தது security question , நீங்கள் ரொம்ப நாள் முன்னாடி உங்கள் அக்கௌன்ட் உருவாக்கி இருந்தால் இந்த கேள்வி அதில் இருந்திருக்காது(எனக்கும் இல்லை.)அந்த option ஐ நீங்கள் இப்போது உருவாக்கி கொள்ளுங்கள். இதில் நீங்கள் உங்களது சொந்த கேள்வியை கேட்டும் பதில் செட் செய்து கொள்ளலாம். எப்போதும் இதை மறந்து விட கூடாது.


இப்போது முடிந்து விட்டதா என்றால், இல்லை. ஏன் என்றால், இதை எல்லாம் உங்கள் அக்கௌன்ட் ஐ ஹாக் செய்பவன் மாற்றி விட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் மாற்றி விட்டால் பின்னர் எப்படி அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது ?


இதற்கு ஒரு form fill up செய்து கூகுள்க்கு அனுப்ப வேண்டும். அதில் நீங்கள் கூறியது எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் அக்கௌன்ட் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்??


உங்கள் account க்குள் நீங்கள் நுழைய முடியவில்லை என்றால் உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.


1 . revovery ஈமெயில் அட்ரஸ் மூலம் உங்கள் அக்கௌன்ட் ஐ திரும்ப பெறலாம்.

2 . security question மூலம் பெறலாம்.

3 . account recovery form fill up செய்து பெறலாம்.


இதில் முதல் இரண்டு வாய்ப்புகளில் உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மூன்றாவது வழியை பயன்படுத்த வேண்டும். அந்த form கீழே உள்ளது.



இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நாம் சரியாக தரும் பட்சத்தில் நாம் நம் அக்கௌன்ட் ஐ திரும்ப பெற முடியும்(நான் இதன் மூலம் தான் பெற்றேன்).வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பது சிறந்தது இல்லையா. எனவே நான் கூறப் போகும் விவரங்களை நீங்கள் முதலில் தயார் செய்து பாதுகாத்துக் கொள்ளவும்.

அதற்கான லிங்க்:  account recovery form


• உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் ஆரம்பித்த தேதியை நீங்கள் உங்கள் ஜிமெயில் இன் முதல் மெயிலில் சென்று குறித்து கொள்ளுங்கள்.

• இந்த gmail id மூலம் நீங்கள் பயன்படுத்திய google product களை பயன்படுத்த ஆரம்பித்த தேதி.

• இதுவரை கவனிக்க தவறினாலும் இனி குறித்து கொள்ளவும்

• உங்கள் வலைப்பூ முகவரி

• உங்கள் orkut profile முகவரி

• கடைசியாக வைத்திருந்த password .

• நீங்கள் அடிக்கடி(frequent ) தொடர்பு கொள்ளும் mail id க்கள்

• உங்கள் நான்கு label களின் name .
Read More