Gmailஇல் delete செய்த Contacts-களை திரும்ப பெறுவது எப்படி

E-mail சேவையில் gmail தற்போது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, ஈ-மெயில் அனுப்பும் போதும் சரி மற்றப்படி அனைத்துவிதமான முகவரி (Contact) -கள் அனைத்தையுமே நம்முடைய ஈ-மெயிலில் தான் சேமித்து வைப்போம். குறிப்பாக internet நண்பர்களின் ஈ-மெயில் முகவரிகள் அனைத்துமே ஈ-மெயிலில் தான் இருக்கும், ஒரு சிலரே தனியாக குறித்து வைத்திருப்பார்கள். இந்த ஈ-மெயில் முகவரியை நாமே அறியாமலேயே delete செய்திருப்போம். அல்லது வேறு செயல்பாட்டின் காரணத்தால் email address delete செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு delete செய்யப்பட்ட email முகவரிகளை மீட்டெடுக்க முடியும்.


முதலில் உங்களுடைய ஈ-மெயில் முகவரிக்குள் நுழைந்து கொள்ளவும், பின் Contacts என்பதை தேர்வு செய்து More Actions என்னும் பட்டியை தேர்வு செய்து அதில் Restore Contacts என்பதை தேர்வு செய்து எத்தனை நாள் என்பதை குறிப்பிட்டுவிட்டு, இழந்த Contact-களை restore செய்து கொள்ள முடியும்.


அதிகபட்சமாக ஒருமாதத்திற்கு உள்ளாக delete செய்த முகவரிகளை மட்டுமே மீட்டெடுக்க முடியும். அந்த குறிப்பிட்ட நாளில் உங்களுடைய ஈ-மெயில் முகவரியில் இருந்த Contact-ள் மட்டுமே restore செய்த பின்பு இருக்கும். மற்ற முகவரிகள் இருக்காது, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பதிவு உங்கள் மனதை கவர்ந்திருந்தால்நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்டலி மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையில் உங்கள் ஓட்டை பதிவு செய்ய மறந்துவிடாதிர்கள் நண்பரே..!

1 comments:

stalin wesley said...

குட் இன்பார்மேசன் .......



உங்கள் உலாவியை கால்குலேட்டராக மாற்றுங்கள்

Post a Comment

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும்,பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.